• Jan 18 2025

திரைக்கு வந்த அன்னபூரணி, பார்க்கிங், கான்ஜுரிங் கண்ணப்பன்... பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளிவந்த திரைப்படங்கள் தான் நயன்தாராவின் அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்.

அன்னபூரணி திரைப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், பார்க்கிங் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பு இருந்தது. விமர்சனமும் பிளஸ் பாயிண்டாக இப்படத்திற்கு அமைந்தது. இந்நிலையில், இப்படங்கள் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.


இதில் அன்னபூரணி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 6 கோடியும், பார்க்கிங் ரூ. 3.5 கோடியும் வரை வசூல் செய்துள்ளது. இந்த இரு திரைப்படங்களின் வசூல் குறைய மிக்ஜாம் புயல் முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து கடந்த வாரம் 8ஆம் தேதி தமிழில் வெளிவந்த திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். சதீஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த திரைப்படம்  உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் வாரங்களில் இந்த படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்ய போகிறது என்று.

Advertisement

Advertisement