• May 17 2024

அண்ணாமலை வீட்டு மருமகள்களுக்கு பாட்டி போட்ட கண்டிஷன்- திருதிருவென முழிக்கும் விஜயா- சுவாரஸியமான Siragadikka Aasai Promo

stella / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், முத்து வீட்டிற்கு அண்ணாமலையின் அம்மா வந்திருக்கின்றார். அவர் தன்னுடைய பேரன் பேர்த்திகளுடன் இருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அண்ணாமலை,விஜயா,மனோஜ், ரோகினி, மீனா, முத்து, ரவி,ஸ்ருதி எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருந்து சாப்பிடுகின்றனர்.

அப்போது பாட்டி இதைப் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு, ஆனால் எனக்கு யார் சீக்கரமாவே ஒரு கொள்ளு பேரனோ பேர்த்திா பெத்துத் தாறவங்களுக்கு நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன்.

என் ஊர்ல இருக்கிற நிலத்தை அந்த குழந்தைக்கு தான் எழுதி வைக்கப்போகின்றேன் என்று சொல்ல, எல்லோரும் தங்கள் தங்கள் ஜோடியை திரும்பிப் பார்க்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement