• Jul 27 2024

ஆண்டவர் போட்ட ஸ்கெச்.. நம்பி ஏமார்ந்த தீவிர ரசிகர்கள்! ஆனாலும் சர்ப்ரைஸ் இருக்கு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படங்களாக தக் லைஃப் மற்றும் கல்கி 2898 ஏடி படம் காணப்படுகின்றது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உலக நாயகன் கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகிய உச்ச நட்சத்திரங்கள் நடிக்கின்றார்கள்.

அது மட்டும் இல்லாமல் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் ரிலீவில் செய்யாத நட்சத்திரங்களும் படத்தில் உள்ளார்களாம். அதிலும் விஜய் தேவர் கொண்டா மற்றும் துல்கர் சல்மான் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் வரும் புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் தான் குரல் கொடுத்துள்ளார். அண்மையில் இதன் கிளிம்ஸ் வெளியாகி  கடும் ட்ரோலுக்கு உள்ளானது.


இந்த நிலையில், இரண்டு பாகங்களாக உருவாகி வரும் கல்கி 28 98 ஏடி படத்தில், கமலஹாசன் எவ்வளவு நேரம் நடித்திருக்கின்றார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தின் முதல் பாகத்தில் கமலஹாசன் காட்சிகள் கொடூரமான வில்லத்தனத்துடன் ஆக மொத்தம் 19 நிமிடங்கள் தான் இடம்பெற்றுள்ளதாம். ஆனால் இதன் இரண்டாம் பாகத்தில் கமலஹாசனின் காட்சிகள் மட்டும் சுமார் ஒரு மணி நேரம்  30 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இதனால் முதலாவது பாகத்தில் குறைந்த நேரம் மட்டுமே கமலஹாசன் காட்சி தருவார் என்று தெரிந்து கொண்ட ரசிகர்கள் சற்று கவலையாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement