• Jan 19 2025

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாம நீ என்னத்த கிழிக்க போறா? சிறகடிக்க ஆசை சீரியல் நடிக்கை கொடுத்த பதிலடி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கின்றது.

அந்த வகையில் புதுப்புது சீரியல்களையும் ஒரு கிரியாசிட்டியை ஏற்படுத்தி நாள்தோறும் சின்னத்திரை சீரியலை பார்க்க வைப்பதற்காக பல சேனல்கள் போட்டி போட்டு வருகின்றன.

அதன்படி விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக காணப்படுவது தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதோடு டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ஆக காணப்படுகிறது. மேலும் இதில் ஹீரோ ஹீரோயின்களை விட அதிகமாக பேசப்படும் நபராக காணப்படுபவர் தான் ஸ்ருதி.

இந்த நிலையில், ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சீரியலுக்கு வர முதல் என்னென்ன கஷ்டங்களை சந்தித்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், ஒரு குடும்பத்தில் இருந்து பெண்ணொருவர் சினிமாவுக்குள் நடிக்க வரவேண்டும் என்று விருப்பப்படும் போது ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் மாதிரியே தனது வீட்டிலும் எதிர்ப்பு வந்ததாக கூறினார்.


ஆனாலும் மகள் ஏதோ ஆசைப்படுகிறாள் என்று விட்டுவிட்டார்களாம். யாரோட சப்போர்ட்டும் இல்லாமல் பல ஆடிசங்களை கடந்து கடைசியில் இந்த வாய்ப்பு வந்ததாக ப்ரீத்தி கூறியிருந்தார்.

மேலும் சினிமாவில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருப்பது தான் அட்ஜஸ்ட்மென்ட். ஆரம்பத்தில் எனக்கு ஒருவர் அட்ஜஸ்மென்ட் பற்றி கேட்டார். ஆனாலும் நான் முடியாது என்று சொன்னேன்.

ஆனாலும் அந்த நபர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் இந்த சினிமாவுக்கு வந்து நீ என்னத்த கிழிக்க போறா? என்று படு  மோசமாக பேசினார். ஆனாலும் நான் இப்ப இப்படி வந்து  உட்கார்ந்திருக்கிறேன் அதுதான் அவருக்கு நான் கொடுக்கும் பதிலடி என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் எப்படி சினிமாவில் வளர முடியும் என்று என்னை கேட்டார். தற்போது நான் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருந்துள்ளேன்.  

இவ்வளவு பேசிய பின்னும் அந்த நபர் என்னை சோசியல் மீடியாவில் போலா செய்துதான் வருகின்றார். இதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பதிலடி. இருந்தாலும் நான் அந்த நபரை பிளாக் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement