• May 08 2026

தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி – ‘LIC’ படம் வெளியீட்டு தேதி வெளியாகியது.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளதுடன், அவருடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளராக அனிரூத் பணியாற்றியுள்ளார்.


இந்த படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பல காரணங்களால் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில், அனைத்து தாமதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.

Advertisement

Advertisement