• Mar 19 2026

அதை இப்போ நினைச்சாலும் அசிங்கமா இருக்கு.. தன் தவறை உணரந்த கேப்ரியல்லா

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி  சீரியலில் நடித்து  மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. அவர் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக காணப்படுகிறார். அந்த சீரியலில் இரண்டு சீசன்களிலும் நாயகியாக நடித்த அவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

முன்னதாக, சினிமாவில் நயன்தாரா நடித்த ஆரா மற்றும் ராகவா லோரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் சீரியலில் கவனம் செலுத்திய அவர், சுந்தரி  மூலம் புகழ் பெற்றார்.

இவர் சுருளி என்பவரை காதலித்து கரம்பிடித்தார். கேப்ரியல்லா குறும்படங்களில் நடித்த போது அதில் கேமரா மேன் ஆக பணியாற்றியவர் சுருளி. இதன்போது அவர்களுக்குள் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி பல எதிர்ப்புகளையும் கடந்து திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக தமது இல்லற வாழ்க்கை கழித்து  வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகை கேப்ரியல்லாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், எங்க அப்பா நடனத்திற்கு நோ சொல்லிட்டாரு. அதனால கடிதம் எழுதி வச்சிட்டு சென்னைக்கு வந்துட்டேன். பிறகு, சமாதானம் பண்ணி என்ன திரும்ப ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. 

அப்போ ஊர்ல எல்லாரும் இவ எவன் கூடையோ ஓடிப் போயிட்டா.. கல்யாணமே பண்ணிட்டு இருப்பா.. அப்படி இப்படின்னு பேசி அசிங்கப்படுத்தினாங்க.. இதுதான் நான் பண்ணின பெரிய தப்பு. அதை இப்போ நினைச்சாலும் அசிங்கமா இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement