சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து செட்டில் இருக்கும் போது அங்கு மனம் நலம் பாதிக்கப்பட்ட பையனின் பெற்றோர் வருகின்றார்கள். அவர்கள் முத்துவுக்கு வேன் ஒன்றை பரிசாக வழங்குகின்றனர். அங்கு மீனாவும் வந்து விடுகின்றார்.
இதனால் முத்து சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்லுகின்றார். அவர்கள் போன பிறகு செல்வம் அதனை தான் ஓட்டுவதற்கு கேட்க, முத்துவும் பெரிய மனதுடன் ஒத்துக் கொள்கிறார். மேலும் இது எல்லாம் மீனா வந்த பிறகுதான் என்னுடைய நிலை மாறியது என்று எமோஷனலாக பேசுகின்றார்.
அதற்கு பின்பு தினேஷ் அங்கு வந்து ரோகிணி பற்றிய உண்மைகளை எல்லாம் புட்டு புட்டு வைக்கின்றார். இறுதியில் ஏதாவது பார்த்து பண்ணுமாறு சொல்ல, முத்து அவரை ரூமுக்குள் வைத்து நன்கு கவனித்து அனுப்புகின்றார்.

அதன்பின்பு மனோஜின் விவாகரத்து சம்பந்தமாக வக்கீலை பார்க்க செல்கின்றனர். அங்கு அவர் முத்து மீனாவை வர சொன்னதாக அவருக்காக வெயிட் பண்ணுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் வந்ததும் கவுன்சிலிங் போது சொதப்ப வேண்டாம் என்று மனோஜுக்கு வக்கீல் சொல்லுகின்றார்.
மேலும் மனோஜ்க்கு துணையாக முத்து மீனாவை போகுமாறு சொல்லுகின்றார். இதன்போது மனோஜ்க்கு விவாகரத்து நடக்க முன்பு திருமணம் பண்ணினால் என்ன நடக்கும் என விஜயா கேட்க, ஒன்றும் பெரிதாக நடக்காது இருவரும் கம்பி எண்ணுவீர்கள் என்று வக்கில் சொல்லி அவர்களை ஆஃப் பண்ணுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!