• Feb 07 2026

அஜித் படம் என்றாலே அது பெஸ்ட் ஷோ தான்,- கன்னட சூப்பர் ஸ்டார் சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படம் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அதேபோல், ஏகே 64 படத்தை வெற்றிமாறனும், ஏகே 65 மூவியை பிரசாந்த் நீலும் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் அஜித் குறித்து கன்னட சூப்பர் ஸ்டார் சொன்ன தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, அஜித்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.அஜித் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் போய்விடுவேன். அன்று எந்த வேலையாக இருந்தாலும் முதலில் அஜித் மூவி தான், ரசிகர்களுடன் ஜாலியாக விசிலடிச்சுப் பார்த்து ரசிப்பேன் என சிவராஜ்குமார் கூறியுள்ளார்.


மேலும் இவர் தமிழில் அண்மையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement