• Sep 16 2024

ரோகிணிக்கு எதிராக திரும்பிய அம்மா..மனசிலுள்ள உண்மையை உடைத்த மீனா!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறக்கடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரவி ஸ்வீட் பண்ணுகின்றார். அதனை மீனாவுக்கு கொடுத்து சேர்ந்து சாப்பிட்டு மகிழ்கின்றார் ஸ்ருதி. இதனை ஒரு பிசினஸ் ஆகவே பண்ணலாமே என்று ரவிக்கு ஐடியாவும் கொடுக்கின்றார்.

அந்த நேரத்தில் விஜயா அங்கு வரவும் மீனாவுடன் சண்டை போடுவது போல் டிராமா பண்ணுகின்றார் ஸ்ருதி. இதனால் விஜயா சந்தோஷப்படுகின்றார். அதன் பின்பு ரவி செய்த ஸ்வீட்டை சாப்பிட்டு பார்த்து பார்வதிக்கும் எடுத்து  செல்லுகின்றார் விஜயா.

இதை தொடர்ந்து மீனாவும் க்ரிஷ்க்கு கொஞ்சம் தருமாறு கேட்டு வாங்கி போகின்றார். முத்து மீனாவும் க்ரிஷை சந்திக்கப் போகின்ற விஷயத்தை ரோகிணி தனது அம்மாவுடன் சொன்னதோடு அவர்கள் தத்தெடுக்கும் நோக்கத்தோடு வருகின்றார்கள். அவர்களை திட்டி அனுப்பிவிடு சொல்லுகிறார். மேலும் க்ரிஷை அவர்களிடம் காட்ட வேண்டாம் எங்கையாவது அனுப்பி வைத்துவிடு என்று சொல்லுகின்றார்.


அதன்படியே முத்து, மீனா அங்கு போய் பார்க்க க்ரிஷ் இங்கே இல்லை என்று பொய் சொல்கின்றார். அதன் பிறகு தான் க்ரிஷை தத்து எடுக்க போற  விஷயத்தை சொல்ல, ரோகினி அம்மா யோசிக்கிறார். அதன் பிறகு அவர்கள் கிளம்பி வந்ததும் நடந்தவற்றை ரோகிணியிடம் சொல்ல, அவர் திட்டுகின்றார்.

ஆனாலும் முத்துவும் மீனாவும் மனசால தான் கேட்கின்றார்கள் எனக்கும் அவர்களோடு இருப்பது தான் சரி என்று சொல்ல, எனக்கு என்ட பையனை என்ன பண்ணனும் என்று தெரியும் உனக்கு இப்ப அவன் தொல்லையா போயிட்டானா இப்படித்தான் என்ட வாழ்க்கையும் நாசம் செய்தா என்று பேசுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement