• May 08 2026

‘அமைதிப்படை’ மீண்டும் ரீ-ரிலீஸ்.. எப்போது தெரியுமா.? சத்யராஜ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய வெற்றி படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் டிரெண்ட் அதிகரித்து வருகின்றன. தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறுவதால் தோல்வியை சந்திக்கின்றன.

இந்த நிலையில், மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியான ' அமைதிப்படை' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டவுள்ளது. அதன்படி இந்தப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 

1994 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில்,  சத்யராஜ் நடிப்பில் அரசியல் நையாண்டி மற்றும் நகைச்சுவை கலந்த கதை மூலம் ரசிகர்களிடையே பிரபலமான திரைப்படம் தான் அமைதிப்படை.


இந்த படத்தின் கதை அரசியல்வாதிகளின் வியூகம், அக்கறையற்ற அரசியல் குணங்கள் மற்றும் சமூக அரசியல் கருத்துகளை நகைச்சுவை என்பன இன்றளவில் மட்டும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

மேலும், அந்த படத்தில் சத்யராஜ் நடித்த அரசியல்வாதி கேரக்டர், வசனங்கள் மற்றும் காட்சிகள் வெளியான காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement