தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கெணத்த காணோம்' திரைப்படத்திலும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.
பல படங்களில் நகைச்சுவையாக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்துள்ள இவர், தொடர்ந்து புதிய படங்களில் தனது கலை திறமையை நிரூபித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
மேலும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக டி. இமான் பணியாற்றியுள்ளார். படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முக்கியமாக, இது யோகி பாபுவின் 300வது திரைப்படமாகும், இது அவருடைய திரையுலக சாதனையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது வெளியான டீசரில், யோகி பாபு புதிதாக சென்ற வண்டியை சிலர் திருடிச் செல்கின்றனர்.. அதன்பின்பு அந்த வண்டிக்கு பலரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால் தான் கஷ்டப்பட்டு வாங்கிய வண்டியை மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதையின் மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய படத்திற்கான டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, படம் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Listen News!