• Jan 18 2025

ஆலியா மானசா படப்பிடிப்பில் திடீரென வந்த நல்ல பாம்பு.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

’ராஜா ராணி’ சீரியல் புகழ் ஆலியா மானசா சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென படப்பிடிப்பில் நல்ல பாம்பு புகுந்து படம் எடுத்து ஆடிய நிலையில் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த வீடியோவை ஆலியா மானசா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ என்ற சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் காதல் உண்டாகி கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவ்வாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் தொலைக்காட்சி சீரியலில் ஆலியா மானசா பிசியாக உள்ளார் என்பதும் தற்போது அவர் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆலியா மானசா சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த வீட்டிற்குள் நல்ல பாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

இது குறித்த வீடியோவை ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் நல்ல பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement