• Apr 15 2026

அதுக்குள்ள படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? கார்த்தியின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் பிரேம்குமார்  இயக்கத்தில் உருவாகிய அடுத்த படத்தில் கார்த்தி நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படத்தில் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து பட குழுவினர்களுடன் கார்த்தி எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரேம்குமார் அவர்களின் படத்தில் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் தனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றும் இந்த படம் கண்டிப்பாக ’96’ படம் போடவே சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி தவிர மற்ற நட்சத்திரங்களின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டும் இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தியின் தங்கை கேரக்டரில் ஸ்ரீதிவ்யா, மற்றொரு முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement