• Jan 19 2025

விடுமுறையை கொண்டாட துபாய் பறந்த ஆல்யா குடும்பம்! சஞ்சீவ் வெளியிட்ட வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். 

ஆல்யா மானசா முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பு சீரியலில் இருந்து வெளியேறினார்.


தொடர்ந்து ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது இதனை அடுத்து ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். 

அதில் ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRP உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, கணவருடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில், ஆல்யா மானசா தனது கணவர் , மாமியார், குழந்தைகள் என குடும்பத்துடன் துபாய்க்கு ட்ரிப் சென்றுள்ளார். அங்கு உச்சகட்ட மகிழ்ச்சியில் குதூகலித்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Advertisement

Advertisement