• Jan 19 2025

'இலக்கியா' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ஹீமா பிந்து! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் இலக்கியா. இது தற்போது இல்லத்தரசிகளால் கவரப்பட்டு பிரபலமாக காணப்படுகின்றது.

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தைத் திருடாதே என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான்  ஹிமா பிந்து.


இந்த சீரியலில கிடைத்த பிரபல்யத்தைத் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பான இலக்கியா சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் குறிப்பாக இவரது நடிப்பு ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில், சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இலக்கியா தொடரில் இருந்து ஹீமா பிந்து வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதோடு, அதற்கான காரணத்தையும் வினாவி வருகின்றனர்.


Advertisement

Advertisement