• Apr 26 2025

"சச்சின்" கொண்டாட்டத்துடன் சூர்யாவின் படத்திற்கும் காத்திருங்கள்.!எஸ்.தாணு பகிர்ந்த Secret

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனி அடையாளம் கொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சமீபத்தில் 'சச்சின்' திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து கதைத்த பேட்டியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 2005ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், நடிகர் விஜயின் ரசிகர்களிடையே இன்று வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே பெருமிதத்திற்குரியது.

'சச்சின்' திரைப்படம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான போதே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அத்துடன் ரசிகர்களின் பேராதரவால், அது 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய சாதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது, மற்றும் இன்றும் இளைஞர்கள் அதனைக் கொண்டாடுவது குறித்து தாணு பெரும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.


அதனை தொடர்ந்து, தியட்டர்களில் இளைஞர்கள் காட்டிய உற்சாகத்தைப் பற்றியும் அவர் பேசினார். அதன்போது, "இப்போது புதிய தலைமுறை இளைஞர்களே சச்சின் படத்தை தியட்டர்களில் கொண்டாடுகிறார்கள். அவர்களது ஆர்வத்தைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. விஜய் ரசிகர்களின் காதலும், அவர்களது உற்சாகமும் எப்போதுமே அவ்வளவு வலிமையானது...!" என்று தாணு தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இன்னொரு படம் 'வாடிவாசல்'. இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகின்றார். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், 'வாடிவாசல்' பற்றிய புதிய அப்டேட்டை தற்போது கலைப்புலி தாணு உறுதிப்படுத்தியுள்ளார். "வாடிவாசல் திரைப்படம் நிச்சயமாக 2026ம் ஆண்டு திரைக்கு வரும். தற்போது படத்தின் வேலைகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. இது ரசிகர்களை வெகுவாக மகிழ்விக்கும் ஒரு சிறப்பு படமாக அமையும்." என்றார் தாணு.

Advertisement

Advertisement