பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சீதா அருணுக்கு போன் எடுத்து நான் உங்ககிட்ட வாங்கின பணம் திருட்டு போயிருச்சு நான் எப்புடியாவது கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பணத்த திருப்பித் தந்திருவேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அருண் இப்ப நான் உன்கிட்ட பணத்த திருப்பித் தரச் சொன்னானா என்கிறார். மேலும் இந்தப் பணம் திருட்டுப் போனதில உன்மேலயும் தப்பில்ல உன்ட அக்கா மேலயும் தப்பில்ல என்கிறார்.
இதனை அடுத்து முத்து பார்வதி வீட்ட போய் நிக்கிறார். அதைப் பார்த்த பார்வதி ஏன் மீனாவ கூட்டிக் கொண்டு வரேல என்று கேக்கிறார். அதுக்கு முத்து மீனா இப்ப வாற நிலைமையில இல்ல என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனாவுக்கு கையில அடிபட்டு இருக்கு என்று சொல்லி முத்து அழுகுறார். அதைக் கேட்ட பார்வதி ஆமா நானும் கேள்விப்பட்டு அங்க வந்து பார்த்தனான் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து முத்து அழுகுறதப் பாத்த பார்வதி அந்த சிந்தாமணி மீனாவுக்கு தொல்ல கொடுக்கத் தான் விஜயாகிட்ட டான்ஸ் பழகவே வந்தாள் என்று சொல்லுறார். மேலும் முத்துவப் பாத்து நீ என்ன செய்யனும் என்று சொல்லு நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து அத்த அந்தப் பணம் எப்புடியும் சிந்தாமணி வீட்ட தான் இருக்கும் நீங்க எப்புடியாவது நாளைக்கு சிந்தாமணிய வீட்ட விட்டு வெளியில கூட்டிக்கொண்டு வந்தீங்க என்றால் காணும்.
இதைத் தொடர்ந்து முத்து எல்லாருகிட்டயும் முக்கியமான விஷயம் கதைக்கோணும் என்று மேல வரச்சொல்லுறார். பின் நாம எல்லாரும் நாளைக்கு சிந்தாமணி வீட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மாதிரி போகப்போறோம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரவி அப்புடி எல்லாம் நடிக்கிறது தப்பு என்று சொல்லுறார். பின் ஸ்ருதி நானும் இதில நடிக்கிறேன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!