• Jan 19 2025

இந்த ஆண்டு வெளியான மொத்த படமும் ஃபிளாப்? ஜீரோவான ஹிட் லிஸ்ட்! தமிழ் சினிமாவை கிழிக்கும் ப்ளூ சட்டை

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் அயலான், மேரி கிறிஸ்மஸ், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் ஒன் ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே வெளியானது.

ஆனாலும் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் இரண்டும் படு தோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டாக்கெட் செய்து, போட்டி போட்டு தமிழ்  படங்கள் வெளியானது. ஆனால் அத்தனை படங்களும் தோல்வியை சந்திப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இந்த ஆண்டு தோல்வியை தழுவிய படங்களின் லிஸ்ட்டை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு உள்ளார்.

அதன்படி அவரது லிஸ்டில் அயலான், கேப்டன் மில்லர், மெரி  கிறிஸ்மஸ், சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகியவை ஃபிளாப் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தற்போது வெளியான சைரன்  படத்திற்கும் பெரிதாக வசூல் இல்லை அதுவும் கூடிய சீக்கிரமே பிளாப் ஆகிவிடும் என பதிவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு வெளியான படங்கள் மொத்தமும் ஹிட் அடிக்கவில்லை. எல்லாம் ஜீரோதான் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement