• Jul 12 2025

’கல்கி 2898 ஏடி’ படத்தில் அமிதாப்புக்கு வாய்ஸ் கொடுத்தது வில்லன் நடிகரா? இன்னொரு ஆச்சரியம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் 700 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் 1000 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை விரைவில் தொட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சில ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமிதாப் பச்சன் நடித்த அஸ்வத்தம்மா என்ற கேரக்டருக்கு தமிழ் டப்பிங் கொடுத்தது பிரபல வில்லன் நடிகர் என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் அர்ஜுன் தாஸ்.



‘கைதி’ திரைப்படத்தில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், சிறுவயதில் இருந்து அமிதாப்பின் தீவிர ரசிகர் என்றும் அவருக்கு குரல் கொடுத்தது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

மேலும் அமிதாப் பேசியது போலவே அச்சுவாசலாக அவருடைய பாணியில் அர்ஜுன் தாஸ் பேசி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமல்ல, இந்த படத்தில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில் இதே படத்தில் கிருஷ்ணராக நடித்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் அர்ஜுன் தாஸ் தான் குரல் கொடுத்துள்ளார். ஒரே படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement