• Jul 26 2026

படப்பிடிப்பில் ரவீனா செய்த செயல்.. வெளுத்து வாங்கிய அக்ஷய் குமார்.! லீக்கான வீடியோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் மிகப்பெரிய மல்டி-ஸ்டார் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ரவீனா டாண்டனை நடிகர் அக்ஷய் குமார் பாராட்டியுள்ள தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

படப்பிடிப்பின் போது ரவீனா காட்டிய அர்ப்பணிப்பை அவர் ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அக்ஷய் குமார் கூறுகையில், ஒரு முக்கியமான காட்சிக்கான படப்பிடிப்பில் நேரம் மிகவும் குறைவாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது பலர் கேரவனுக்கு சென்று ஆடை மாற்றிக் கொண்டிருந்த நிலையில், நேரத்தை வீணாக்காமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்த ஜெனரேட்டர் வாகனத்தில் ஆடை மாற்றிக் கொண்டு உடனடியாக காட்சிக்குத் தயாராகி வந்ததாக ரவீனா டாண்டனை புகழ்ந்தார். தனது பணிக்கான அர்ப்பணிப்பும், படக்குழுவின் நேரத்தை மதிக்கும் குணமும் தான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது என்றும் அக்ஷய் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் ரவீனாவின் தொழில்முறை ஒழுக்கத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 'வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, அர்ஷத் வார்சி, பரேஷ் ராவல், ஜானி லீவர், ரவீனா டாண்டன், லாரா தத்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement