• Apr 26 2024

அக்காவுக்கும் சரத்குமாரிற்கும் தொடர்பு-திருமணமாகமல் இருக்கும் நக்மா-உண்மையை உடைத்த நடிகை ஜோதிகா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஒரு காலத்தில் இளைஞர்கள் பலரின் மனங்களில் கனவுக் கன்னியாக வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது திரைப்பயணம் ஆனது 1999-ஆம் ஆண்டு 'வாலி' என்ற திரைப்படத்தின் மூலமே ஆரம்பமானது. 

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் பெரியளவில் வெற்றியையும் கண்டிருக்கின்றார். அதாவது பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து 'குஷி, டும் டும் டும், தூள், திருமலை, மொழி, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு' என ஏராளமாக வெற்றி படங்களைக் கொடுத்திருக்கின்றார்.

இந்நிலையில் இவரின் அக்கா நக்மா பற்றி வெளிவந்த கிசுகிசு பற்றி கூறியுள்ளார்.தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருபப்பவர் தான் நக்மா. பாட்ஷா படத்தில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஜோதிகா கூறியதாவது....அதாவது அக்காவுக்கு சரத்குமார் சாரோட தொடர்பிருந்ததா சொல்ற காலகட்டத்தை பத்தின விவரம் எனக்குத் தெரியல. அது அவங்க சம்பந்தப்பட்ட விஷயம்ங்கறதால அக்காகிட்டேயும் இது பத்தி நான் கேட்டுகிட்டதில்லை. 

பத்திரிகைகாரர்கள்தான் ரொம்ப நாளா எழுதிட்டு இருந்தாங்க. சில தகவல்கள் உண்மையா இருக்கலாம். சிலது பொய்யா இருக்கலாம். அந்த உறவு நிச்சயமா திருமணத்துல முடிய வாய்ப்பில்லைனு ஒரு காலகட்டத்துல அக்கா தீர்க்கமா முடிவு செஞ்சுட்டாங்க. ஆனா, சரத் சாரோட எங்க நட்பு தொடருது. நான் அவர்கிட்ட அடிக்கடி பேசுவேன். அந்த அளவுக்கு நட்பு தொடருதுன்னா, முள்மேல பட்ட சேலையை எடுக்கற மாதிரி அக்கா எத்தனை லாகவமா விஷயத்தை கையாண்டிருப்பான்னு எனக்கு யோசிக்கத் தோணும்.எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement