• Jul 29 2026

திரிஷாவுடன் ரொமான்ஸ் பண்ணும் விடாமுயற்சி அஜித்.. இது தான் இன்ப அதிர்ச்சியா? வெளியான போஸ்டர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். கடந்த மாதம் குட் பேட் அக்லி படத்தின் முதலாவது ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதிலும் நடித்து வருகின்றார் அஜித். சில தினங்களுக்கு முன்பு ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை வந்த அஜித், மீண்டும் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் இந்தப் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என கூறப்பட்ட போதிலும் தற்போது அதில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் போஸ்டர் ஒன்று இன்று மாலை வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதில் அஜித்துடன் நடிகை திரிஷா  இருப்பதோடு மீண்டும் அஜித் திரிஷாவின் காம்போ களைக்கட்டும் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement