• Jan 19 2025

கொஞ்சம் கூட திருந்தாத கோபி.. புதிய கதைக்களத்துடன் வெளியான பரபரப்பு ப்ரோமோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் ஐந்து இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த சீரியலில் ஈஸ்வரி விடுதலையாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் நீ என் பிள்ளை இல்லை என்று கோபியை தலைமுழுகின்றார். மேலும் தனக்கு ஒரு மகள் தான் அது பாக்கியா  மட்டும்தான் என்று சொல்லுகின்றார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில், சென்னையில் ஃபேவரிட் சாப்பாடு ஒன்றை செலக்ட் பண்ணுவதற்காக போட்டி ஒன்று நடத்தப்படுகின்றது என கோபியின் செஃப் கோபிக்கு சொல்லுகிறார்.

அதேபோல மறுபக்கம் இந்த செய்தியை பழனிச்சாமி பாக்கியாவுக்கு சொல்ல, பாக்கியா தயங்கிய போது ஈஸ்வரி அதில்  பங்குபற்றி வெற்றி பெற வேண்டும் என ஊக்கம் கொடுக்கின்றார்.


இதைத்தொடர்ந்து குறித்த போட்டியில் பாக்கியாவும் கோபியும் பங்கு பற்ற அங்கு நின்ற ஈஸ்வரியிடம் கோபி ஆசீர்வாதம் வாங்குகின்றார். ஆனால் ஈஸ்வரி அவரை ஆசீர்வாதம் பண்ணாமல் இந்த போட்டியில் பாக்கியா தான் வெற்றி பெற போகிறார் என்று சவால் விடுகின்றார்.

இதை அடுத்து கோபி மீண்டும் பாக்கியாவை சீண்டி நீ இந்த போட்டியில் தோற்கப் போகிறார் என தெனாவட்டாக பேசுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி என்ன நடக்கும்? இந்த போட்டியில் யார் வெல்லுவார் என்பதை பார்ப்போம்.

Advertisement

Advertisement