• Sep 14 2024

GOAT ப்ரோமோசன்ல அஜித் பட சட்டையா? மலேசியாவில் வெங்கட் பிரபு செய்த காரியம்!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு.  தற்போது இவருடைய இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

கோட் திரைப்படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிப்பதோடு இதில் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உட்பட பலர் நடிக்கின்றார்கள். இதன் காரணத்தினாலேயே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இதுவரை கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியானது. அதில் விஜய் - சினேகா காம்போவில் வெளியான மெலோடி பாடல் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சமீபத்தில் இந்த படத்தின் ட்டெய்லர் வெளியாகி படம் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கோட் திரைப்படத்தின் ஷுட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்தனர். 


இந்த நிலையில், மலேசியாவில் கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற வெங்கட் பிரபு அங்கு, அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டிஷர்ட்டைஅறிமுகம் செய்து வைத்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம்  வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது.

அதாவது, கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள வெங்கட் பிரபு அங்கு கோட் படத்தை மட்டும் பிரமோஷன் பண்ணாமல் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி  படத்தின் டீசர்டையும் வெளியிட்டு அதனையும் பிரமோஷன் பண்ணி உள்ளார்.


Advertisement

Advertisement