• Apr 26 2024

ஏர்போட்டில் ரசிகர்களை குஷிப்படுத்திய அஜித்- இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத் சென்ரன விசாகப்பட்டினம் மற்றும் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகர் போன்ற இடங்களில் இப்படப்பிடிப்பு நடந்தது.


இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.இதனைத் தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். சில நாட்களுக்கு முன்  இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.


அனிருத் இசையில், லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் நீல நிற உடையில்  ரசிகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 


ரசிகர்களுடன் சிரித்து ஜாலியாக பேசிய படி அஜித் சோதனை செய்ய செல்வது போல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் மற்றொரு வீடியோவில் மெட்டல் டிடெக்டர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரியிடம் அஜித், புன்முறுவலுடன் பேசும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement