• Jan 19 2025

ஓவர் டைட்டான உடையில் இளசுகளை கதறவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! தெறிக்கும் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக் கதைகளையும் குடும்ப பாங்கான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரும் ஆரம்பத்தில் தனது குடும்ப வறுமை காலமாக கஷ்டப்பட்டு படிப்படியாகவே இன்று பலராலும் புகழப்படும் ஒரு நடிகையாக உயர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக  புலிமடா படம் வெளியானது. இதைத் தொடர்ந்து கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களும் இவர்களும் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடித்த வட சென்னை திரைப்படம் இவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அதுபோலவே குற்றமே தண்டனை, லட்சுமி, தர்மதுரை போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார்.


எனினும் இவர் நாயகியாக நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.  தற்போது மலையாளத்தில் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.

அதாவது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனாலும் அவர் குடும்ப குத்து விளக்காக அடக்க ஒடுக்கமான உடைகளை தான் அதிகமாக அணிவார். 

ஆனால் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்து அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணிந்து உள்ளார். தற்போது குறித்த போட்டோஷூட் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement