• Jan 19 2025

மொட்டை தலை கையில் கோடாரி துப்பாக்கியுடன் டெரராக நிற்கும் பகத் பாஸில்..! புஷ்பா 2 லுக்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் டாப் நடிகராக திகழ்பவர் தான் பகத் பாசில். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடிப்பிற்கு பேர் போன ஒருவராக காணப்படுகின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் இந்தி ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் பகத் பாசிலை மேலும் வாழ்த்து முகமாக அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களின் சிறப்பு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இருந்து அவருடைய பஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் பகத் பாஸில் நடிக்கும் புஷ்பா 2 படத்தின் சிறப்பு போஸ்டர் வழியாகி உள்ளது. அதில் மொட்டை தலையுடன் கையில் கோடாரி மற்றும் துப்பாக்கி ஏந்தியபடி பகத் பாசில் நிற்கின்றார். இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement