• Jan 19 2025

புது வடிவில் களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வெளியானது திரைப்பட டைட்டில்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக காலடி எடுத்து வைத்து சுமார் 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் ஆரம்பத்தில் 'பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை' போன்ற படங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.


தனக்கு ஏற்ற நல்ல கதை தேர்வுகளை தெரிவு செய்து தன்னுடைய நடிப்புத் திறமையினால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கின்றார். 


அதுமட்டுமன்றி இன்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த ரீதியில் தற்போது டார்லிங், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை மோஷன் போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு 'சிஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Advertisement

Advertisement