• Oct 01 2025

ஐஸ்வர்யா மேனனின் போட்டோஷூட் க்ளிக்ஸ்..!சமூக வலைத்தளங்களில் ஹீரோயின் லுக் ட்ரெண்டிங்!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தன்னுடைய அழகும் திறமையும் இணைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன், தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களால் மீண்டும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். 


2012-ஆம் ஆண்டு வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா, அதன் பின்னர் 'தமிழ் படம் 2' வாயிலாக பெரும் ரசிகர் ஆதரவைப் பெற்றார். 'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்ததுடன், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களை செம்மையாக செல்வாக்குடன் வலம் வருகின்றார். 


தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஐஸ்வர்யாவின் அழகிய புகைப்படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஸ்டைலிஷ் உடைகள், கியூட் போஸ், தன்னம்பிக்கை நிரம்பிய வெளிப்பாடு என, புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் சூடாக பரவி வருகின்றன.







Advertisement

Advertisement