• Dec 02 2024

ஆஹா கல்யாணம்... பிரபல சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்... வாழ்த்து கூறும் ரசிகர்கூட்டம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் கதாநாயகிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.


செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திக். இத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் இடையில் படம் நடிக்கப் போகிறேன் என சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார்.


கொஞ்ச இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரில் நடிக்க வந்த இவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.இத்தொடரில் நாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா புதுமுகம் நடிக்கிறார். இந்த தொடரில் நடித்துவரும் ஹர்த்திகா மலையாளத்திலும் நடித்துள்ளாராம்.


தமிழில் இவர் நடித்துள்ள இந்த முதல் தொடர் மூலம் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வருகிற நவம்பர் 6ம் தேதி அவர் காதலித்த நபருடன் திருமணம் நடக்க இருக்கிறதாம். ஆனால், ஹர்த்திகா திருமணம் செய்யும் நபர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஹர்த்திகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.  

Advertisement

Advertisement