• Jan 18 2025

நடிக்கமாட்டேன் என்று சொன்ன வடிவேலுவை விரட்டி விரட்டி பாடம் புகட்டிய பார்த்திபன்- என்ன நடந்தது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்னும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் வடிவேலு. இதனை அடுத்து தேவர் மகன், சின்ன கவுண்டர், சிங்காரவேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். ஒருகட்டத்தில் முக்கிய காமெடி நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார்.ஏனெனில் அப்பாவி போல வடிவேலுவும், அவரை எடக்கு மடக்காக பேசி திணறவைக்கும் வேடத்தில் பார்த்திபனும் நடித்து ரசிக்க வைத்தனர். அதுவும், வெற்றிக்கொடி கட்டு படத்தில் துபாய் ரிட்டனாக இருக்கும் வடிவேலுவை பார்த்திபன் வச்சி செய்த காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.


இப்படத்தின் ஒரு காட்சியில் பெஞ்சமின் வடிவேலுவை அசிங்கமாக திட்டுவார்.ஆனால், அவர் தன்னை அப்படி திட்டுவது பிடிக்காத வடிவேலு பெஞ்சமினை சரியாக நடிக்கவிடவில்லை. இதை தெரிந்துகொண்ட பார்த்திபன் வடிவேலுவையும், அங்கிருந்த கார் டிரைவரையும் அழைத்து ‘வடிவேலுவை 5 கிலோ மீட்டர் தூரம் கூட்டிட்டு போய்ட்டு திரும்பி வா’ என சொல்லிவிட்டாராம்.


அதன்பின் பெஞ்சமினிடம் ‘இப்போது வடிவேலு இல்லை. கேமராதான் வடிவேலு. உங்களுக்கு என்னவெல்லாம் திட்ட வருகிறதோ எல்லாத்தையும் திட்டுங்க’ என சொல்ல பெஞ்சமினும் பொளந்து கட்டியுள்ளார். வடிவேலுவை பெஞ்சமின் அசிங்கமாக திட்டும் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தகவலை பெஞ்சமின் ஊடகம் ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement