• Jul 22 2026

அம்மா கேரக்டரில் நடிக்க கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி டார்ச்சர்..! பிரபல நடிகை பகிர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை தான் மாலதி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் பல படங்களுக்கு துணை நடிகையாக நடித்துள்ள இவர், சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பற்றி பேசி உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், அம்மா கேரக்டரில் நடிக்க சென்றால் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் டார்ச்சர் கொடுக்கின்றார்கள்.


இளம் வயதில் காணப்படும் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை இல்லை. ஆனால் என்னைப் போன்ற வயதான நடிகைகளை தான் டார்கெட் செய்து துரத்துகின்றார்கள். அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு  சம்மதிக்கவில்லை என்றால் செட்டில் மதிக்க மாட்டார்கள்.

அத்துடன் செட்டில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் கூட குத்தம் என்பார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் ஓகே என்றால் பிக்கப் என்ன? ட்ராப் என்ன? கேரவன் வசதி, எக்ஸ்ட்ரா மணி, மேடம் என்று ஏகப்பட்ட சலுகை இருக்கின்றது என கூறியுள்ளார் நடிகை மாலதி.

Advertisement

Advertisement