• Feb 20 2025

அடேங்கப்பா..! மீண்டும் அசுர வேகத்தில் களமிறங்கிய தனுஷ்.! லீக்கான ஷூட்டிங் வீடியோ

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் ஃபேவரைட் நடிகராக தனுஷ் தற்போது பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் கால் பதித்துள்ளார். மேலும் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக இயக்குநராக பாடல் ஆசிரியராக பன்முகம் கொண்டு விளங்கி வருகின்றார்.

கஸ்தூரிராஜாவின்  இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு செல்வராகவன் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் ரஜினியின் வீட்டு மருமகனும் ஆனார்.

d_i_a

இதைத்தொடர்ந்து தற்போது இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதற்கான பட ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்ற போது தனுஷ் அதில் கலந்து கொள்ளவில்லை.


இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் படம் ஒன்றின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் தனுஷ் பார்ப்பதற்கு 18 வயது இளைஞரை போலவும்  உத்தமபுத்திரன் படத்தில்  இருந்ததைப் போலவும் காணப்படுகின்றார். இதனை தற்போது அவருடைய ரசிகர்கள் படுவேகமாக வைரலாக்கி வருகின்றார்கள்.


மேலும் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள ஒரு கல்லூரியில் தான் தனுஷின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. குறித்த படப்பிடிப்பு சுமார் 12 தொடக்கம் 15 நாட்கள் வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement