• Mar 28 2025

கருத்து சுதந்திரம் என்று அவதூறு பரப்புவீர்களா.? யூடியூபர்கள் மீது கொந்தளித்த குஷ்பு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக ஊடகங்கள், குறிப்பாக யூடியூப் சேனல்கள் பெரிதாக வளர்ந்துள்ளன. அதில் சில யூடியூப் பதிவுகள் மரியாதையற்ற விமர்சனங்களையும், பெண்களை இழிவுபடுத்துகின்ற கருத்துக்களையும் முன்வைப்பதனால், இது பரபரப்பான விவாதமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் நடிகையும் பாஜக தேசிய செயலாளருமான குஷ்பு சுந்தர், பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடும் யூடியூபர்கள் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதில்  குஷ்பு  கூறுகையில் , "பெண்களை அவமதிக்கும் விதமான கருத்துக்களை வெளிப்படுத்தும் யூடியூபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதுடன்  கருத்து சுதந்திரம் என்பது எல்லை மீறக்கூடாது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டுகளாக தமிழகத்தில் யூடியூப் பதிவுகளில் பெண்களை குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, அரசியல், சினிமா, சமூக நிகழ்வுகள் போன்ற துறைகளில் பெண்கள் முன்னணி இடங்களை பிடிக்கத் தொடங்கியவுடன், அவர்களை விமர்சிக்கவும், அவதூறு பரப்பும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

குஷ்பு தனது கருத்தில், "ஒவ்வொரு யூடியூப் பதிவும் சுயமாக பரிசீலிக்கப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் என்று பெயரில் அவதூறு பரப்புவதற்கு அனுமதி இருக்கக்கூடாது. இது ஒரு சமூகப் பொறுப்பாக மாற வேண்டும் " என்றார்.


இதற்கிடையில், தமிழக அரசும் சமூக ஊடகங்களில் பெண்கள் மீதான அவதூறு பரப்பல் குறித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களை தடுக்கும் விதமான சட்டப் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்கள், மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக பயன்படவேண்டுமே தவிர  அவதூறு மற்றும் மோசமான விமர்சனங்களை பரப்பக் கூடாது என்றார். அத்துடன் குஷ்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, சமூக ஊடகங்களின் ஒழுங்குமுறை பற்றிய விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இது குறித்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

Advertisement

Advertisement