• Sep 19 2024

ஹனுமான் படத்தின் டப்பிங் பணியை விறுவிறுப்பாக ஆரம்பித்த நடிகை வரலட்சுமி- இத்தனை மொழியில் வெளியாகவுள்ளதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் தான் வரலட்சுமி. இவர் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் என்பதோடு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவராவார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்தியன் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனு மான்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹனு மான் கதாபாத்திரத்தில் தேஜா சஜ்ஜா நடிக்க, மீனாட்சி என்ற கதாநாயகியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

அத்தோடு இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சிவேந்திராவும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்த் பட்நாயக் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைப்பாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரலட்சுமியும் தனது டப்பிங் பணியை ஆரம்பித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement