• May 03 2024

முன்னணி நடிகை த்ரிஷாவைப் பேட்டியெடுத்த அஞ்சலி- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழில் விஜய், அஜித் , சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது ஷோலே ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.

மேலும் இது தவிர பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்றைய தினம் த்ரிஷா தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி சன் டிவி-ல் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சியில் த்ரிஷாவை பேட்டியெடுத்துள்ளார் பிரபல நடிகை அஞ்சலி. த்ரிஷா நடிக்க வந்த ஆரம்பத்தில் சென்னையில் உள்ள மாயாஜால் மாலில் விஜயசாரதியுடன் இணைந்து சில மாடல்களும் ரசிகைகளாக பேட்டி எடுத்துள்ளனர்.

அந்தப் பேட்டியில் நடிகை அஞ்சலி மாடல் அழகியாக கலந்து கொண்டு த்ரிஷாவை பேட்டி எடுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement