• May 20 2024

கையில் துப்பாக்கியுடன் நடிகை சுனைனா- ரெஜினா திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சுனைனா. அந்த படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரியும் வேற லெவெலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர். அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

தொழிலதிபர் சதீஷ் நாயர் என்பவர் தயாரிக்கும் திரைப்படம் ரெஜினா. இந்த படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டோமின் டி சில்வா என்பவர் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சுனைனா நடிக்க உள்ளார்.

சுனைனாவின் கணவராக நாக் அஸ்வின் நடித்திருக்கும் இந்த படம் சராசரி குடும்பத்து பெண், தன் காணாமல் போன கணவனை தேடும் கதை என்பது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சுனைனா கையில் துப்பாக்கியோடு இருக்கும் விதமாக வடிவமைக்கப்படுள்ளது.. இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்ட இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement