• May 20 2024

அந்த இடத்தில் குத்திய டாட்டூ-நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்த நடிகை ரேஷ்மா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வானி ராணி என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா. 2015 இல் மசாலா திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியான கதாபாத்திரத்தின் ஊடாக பிரபல்யம் அடைந்த ரேஷ்மா பசுபிலேற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நியூட்ரல் ரேஷ்மா என்ற பெயர் எடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இவருக்கு ஏராளமான பாலோயர்களும் உள்ளனர். இந்நிலையில், தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அண்மையில் நடிகை ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் ’உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்து கூறுங்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரேஷ்மா அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்க்க முடியாது.அது கொஞ்சம் பெரிய டாட்டூ. 2 அழகான ரோஜாக்கள் தான் அந்த டாட்டூ என்றும் அது ரொமன்ஸ்க்காகத்தான் போட்டு இருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement