• May 20 2024

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த வசூல் மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கே.ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் உதவிப்பணியாளராக சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . ஒரு கல் ஒரு கண்ணாடி, இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

மேலும் இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, மனிதன் போன்ற படங்களில் நடித்து பிரபல்யமானார். இவர் நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், விளங்குகின்றார்.

தொடர்ந்து 2020இல் வெளிவந்த சைக்கோ என்ற படத்தில் கண் தெரியாத தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல விமர்சனங்களையும், வணிக ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது.

அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்குள் நீதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியாகவுள்ளது.கடந்த 2019 இல் ஆர்டிகிள் 15' திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.வெளியாகும் போதே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தமிழ் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆறி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொருத்தமான காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

இப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக்கான நிகழ்ச்சியில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசு படத்தின் வசூல் பற்றிய தகவலை கூறியிருந்தார்.12 கோடி ரூபாயை மொத்தமாக வசூல் செய்து 6 கோடி ரூபாயை ஷேர் ஆக பெற்று தந்துள்ளது இந்த படம் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement