• May 20 2024

விக்ரம் படத்தை பார்த்த குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு – ஷாக் தகவலை வெளியிட்ட பெற்றோர்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் படத்தை பார்த்த குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எல்கேஜி படிக்கும் மாணவன் படத்தை பார்த்து விட்டு விட்டுச் சென்ற போது கையில் கிடைக்கிற பொருட்களை கத்தியால் குத்தி கிழிப்பது, தானாக கீழே விழுவது என வித்தியாசமான நடந்து கொள்வதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் படத்தை பார்க்கச் செல்லும்போது குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டாம் என படம் பார்த்த பெற்றோர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement