• May 20 2024

அல்போன்ஸ் இயக்கத்தில் நயன்தாரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மனசிகரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் நம்ம நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இதைத்தொடர்ந்து சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் போன்ற முக்கிய பிரபலங்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் .

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக காத்து வாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் கண்மனி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குநருடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா.அதாவது ’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கோல்ட் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், ரசிகர்களிடம் படத்தைக் காட்டுவதற்காக படக்குழு கடினமாக உழைத்து வருவதாகவும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதையடுத்து தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement