• Apr 17 2026

நடிகை சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கு..! கிங்ஸ்லி மனைவி குறித்து திடுக்கிடும் தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெல்சன் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து வந்தார்.


கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த தம்பதிகள் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அதன்படி, நடிகை சங்கீதா 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு ஷிவ்ஹியா என்ற மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், அவர்கள்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றதாகவும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement