• Jul 09 2025

"அந்தமாதிரி காட்சிகளில் நடிப்பது எளிதல்ல..." வெளிப்படையாக பேசிய நடிகை மதுபாலா..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் மதுபாலா. இவர் ரோஜா, ஜென்டில்மேன் போன்ற ஹிட் படங்களின் மூலம் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.


1999ல் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்வில் செழித்து வந்த அவர் தற்போது மீண்டும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகை மதுபாலா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். அதனால் பல படங்களை நான் நிராகரித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.


மேலும் “ஒரு படம் படப்பிடிப்பு போது, முன்கூட்டியே எதுவும் சொல்லாமல் திடீரென முத்தக் காட்சிக்காக சொல்லியபோது என்னிடம் அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.” என தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement