• Jan 19 2025

ஜெய்ஸ்ரீராம்... முழு ராம பக்தையாக மாறி விட்ட கஸ்தூரி.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இன்று ராம நவமி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை கஸ்தூரி ராமர் கோவிலுக்கு சென்று ஜெய் ஸ்ரீராம் என்று கூறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கஸ்தூரி அதன் பின் குணச்சித்திர நடிகையாக மாறினார் என்பதும் தற்போது கூட அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வித்தியாசமாக விளையாடினார் என்பதும் அவர் பேசிய பல கருத்துக்கள் ஒளிபரப்பாகவில்லை என்று வெளியே வந்ததும் வருத்தத்தை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் சமூக கருத்துக்கள், அரசியல் கருத்துக்கள், ஆன்மீக கருத்துக்கள் ஆகியவற்றை மிகவும் துணிச்சலாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நடிகை கஸ்தூரி சற்று முன் ராம நவமியை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு சென்ற வீடியோ மற்றும் ராமரின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் ஜெயஸ்ரீ ராம் என்று அவர் பக்தியுடன் கூறிய  காட்சி உள்ளது. 

மேலும் அவர் ராமரை தரிசனம் செய்யும்  புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கடவுள் ராமர் சுய ஒழுக்கம் உடையவர், வீரம் அன்பு ஆகிவற்றின் முன் மாதிரியாக இருந்தார், தர்ம அவதாரமாக வாழ்ந்தார். சீதாதேவி பொறுமை மற்றும் நல் ஒழுக்கத்தின் உருவகமாக இருந்தார். இந்த ராமநவமியில் அந்த அவதார புருஷனுக்கும் நெருக்கமாக இருக்க முயற்சிப்போம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement