• Apr 26 2024

நடிகை ஹன்சிகாவிற்கு இன்று திருமணம்..அடுத்தடுத்து வெளியான சூப்பர் வீடியோக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார்.இவ்வாறுஇருக்கையில் இன்றைய தினம் ஹன்சிகா சோஹைல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதற்கான கொண்டாட்டங்கள் கடந்த மாதம் முதலே நடந்து வருகின்றன.

இதனிடையே நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சியில் ஹன்சிகா போட்ட குத்தாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து அரண்மனை படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

எனினும் சமீபத்தில் இவரது நடிப்பில் மகா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார். சிம்புவுடன் ஹன்சிகா காதல் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. மேலும்  இந்த பிரேக் அப்பிற்கு பிறகு மகா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதனால் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆயினும் படம் சொதப்பியது.

இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ஆயினும் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நிலையில் தற்போது அவரது திருமணம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. தனது பிசினஸ் பார்ட்னர் சோஹைல் கத்தூரியாவுடன் இன்றைய தினம் ஹன்சிகாவின் திருமணம் நடைபெறவுள்ளது.எனினும்  இதையொட்டி பாரீசின் ஈபிள் டவர் அருகே சமீபத்தில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


அத்தோடு இன்றைய தினம் நடைபெறவுள்ள திருமணத்தையொட்டி கடந்த மாதம் முதலே ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. இன்றைய தினம் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவரது திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதில் ஹன்சிகா அனைவருடனும் இணைந்து சூப்பரான நடனம் செய்தார்.



இந்த நிகழ்ச்சியில் அழகான உடையில் மணமக்கள் காணப்பட்டனர்.மேலும்  இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் மணமக்கள் வெள்ளை நிற உடையில் மிகவும் அழகாக நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சிறப்பாக அமைந்துள்ளது.



ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரின் முன்டோட்டா அரண்மனையில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. அத்தோடு இந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற மெகந்தி மற்றும் சுஃபி நிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் திருமணமும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement