• Apr 26 2024

இதன் பின்னணியில் இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே - ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவினதும், இயக்குனர் அயன் முகர்ஜினதும் கனவுத் திரைப்படமாகக் கருதப்படுவது பிரம்மாஸ்திரா ஆகும்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் வெகு விறுவிறுப்பாக இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது இதன் ஷூட்டிங் முடிவுற்று அயன் முகர்ஜி குழுவினர் திரைப்படத்தினை திரையிடலுக்கு தயாராகி வருகின்றனர்.


இன்னும் 10 நாட்களில் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் ஹிந்தி சினிமாவின் முக்கிய ஜாம்பவான்களான அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகியோர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமில்லாது ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும்,ஆர்வத்தையும் இத்திரைப்படம் தூண்டி இருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது. அது என்னவெனில் சிறிது நேரத்துக்கு முன்னர் அயன் முகர்ஜி பிரம்மா திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ கிளிப்பை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


அந்த வீடியோ குறிப்பில் ஒலிக்கும் குரல் தீபிகா படுகோனுடையது  என பிரம்மாஸ்திரம் ரசிகர்கள் விவாதித்து வருகின்றமை சமூக வலைத்தளங்களை வைரலாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement