• May 06 2024

சுதா கொங்கராவிற்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறதா... அதுவும் எந்தப் படத்திற்கு தெரியுமா..? ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரைப்பட பெண் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் திரைக்கதை ஆசிரியராக இருக்கின்றார். எனினும் இவர் நன்கு அறியப்பட்டது திரைப்படங்களின் வாயிலாகவே தான்.


மேலும் இவர் துணை இயக்குநராக மணிரத்னத்திடம் 7ஆண்டுகள் பணியாற்றி இருந்தார். அதன்பின்னர் முதன் முதலில் 2010-ஆம் ஆண்டில் 'துரோகி' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தோன்றினார். அதனைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'சூரரை போற்று'. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. 

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை தற்போது இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இதில் அக்‌ஷய் குமார், ராதிகா மதன் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தை அடுத்து, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் மற்றுமொரு படத்தை இயக்க இருக்கிறார்.


அந்தவகையில் 'சூரரை போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க இயக்குநர் சுதா கொங்கராவிற்கு வழங்கப்பட்ட  சம்பள நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படத்திற்கு இவர் ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ரீமேக் படத்திற்கே இவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement