• May 04 2024

11ஆண்டுகளை நிறைவு செய்த 'மங்காத்தா'... இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படங்களை வெளியிட்ட இயக்குநர்... குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் எந்தவிதமானவொரு சினிமாப் பின்புலமும் இல்லாமலே சினிமாவில் அறிமுகமானார். எனினும் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் முன்னேறி இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். 

இவ்வாறாக சினிமாவில் சிறப்பாக நடித்து வருகின்ற இவர் இதுவரை 60 இற்கும் அதிமான படங்களில் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களில் நடித்திருப்பினும் இவர் சினிமாவில் அதிக அளவில் தோல்விகளையே சந்தித்திருக்கின்றார்.


அந்த வகையில் கடந்த 2007-ஆம் ஆண்டு பில்லா, கிரீடம் என வரிசையாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் அஜித். எனினும் அதன்பின்னர் வந்த 4 ஆண்டுகள் தொடர்ந்து அஜித்திற்கு கடுமையாக இருந்தன. அதாவது அந்தக் காலகட்டத்தில் வெளியான 'ஏகன், அசல்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து பிளாப் ஆனதால் சினிமாவில் அஜித்தின் கெரியர் கடும் சரிவைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியை அடுத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்த அஜித், தனது 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு வழங்கினார். பலத்த எதிர்பார்ப்போடு உருவான அந்தப் படத்திற்கு 'மங்காத்தா' எனப் பெயரிட்டு இருந்தனர்.


மேலும் அப்படமானது 2011 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியானது. அடுத்தடுத்து 2 தோல்வி படங்களை கொடுத்த அஜித்துக்கு 'மங்காத்தா' படம் அவர் சற்றுமே எதிர்பார்க்காத வகையில் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து அவரது கெரியரில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக மாறியது. 

இந்நிலையில் 'மங்காத்தா' திரைப்படம் ஆனது வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது. இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக நம்ம தல ரசிகர்கள் #11YearsOfCultMANKATHA என்கிற ஹேஷ்டேக்கை பதிவு செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது அப்படத்தின் இயக்குநர் வெங்கட் "பிரபு தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என கூறி மங்காத்தா ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement