• Jun 07 2026

ஹீரோயின் வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றம்? அனுகிரகா கண்ணீர் மல்க புகார்

shali / 1 month ago

Advertisement

Listen News!

எருமைசாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸைச் சுற்றி தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தொடரில் தலைவாசல் விஜய், மஹிமா நம்பியார், அபிநயா நேத்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் ரூம் சர்வீஸ் லேடியாக நடித்ததாக கூறப்படும் அனுகிரகா நம்பியார் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து, தன்னிடம் அநீதி நடந்துள்ளதாக அழுது கொண்டே பகிர்ந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்ததாக கூறிய அவர், ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி இந்த சீரிஸில் இணைத்ததாக தெரிவித்தார்.

மேலும், ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் வேறு எந்த வாய்ப்பையும் ஏற்க முடியாமல் இருந்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக படப்பிடிப்பிற்கே அழைக்காமல் தன்னை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், சம்பளம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து அவமதிப்பான பதில் வந்ததாகவும் கூறினார். குறிப்பாக, விஜயகுமாரின் மனைவி நக்‌ஷத்திரா தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலையும் வருமானமும் இல்லாமல் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என கூறியதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement