தமிழக அரசியல் மற்றும் கல்வி தொடர்பான விவகாரங்கள் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பரபரப்பாக இருக்கின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மும்மொழிக் கொள்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மிகுந்த எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக, நடிகர் விஷால் கூறுகையில், "மாணவர்கள் எந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்ய வேண்டும். இது அவர்களின் உரிமை. எந்த விஷயத்தையும் யாரும் கட்டாயமாக திணிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கையில் விஷால் பெற்றோர்களின் விருப்பத்தை பிரதானமாக பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அவருடைய இந்த கூற்றுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளது.
இதன்போது, நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கிய அரசியல் பயணத்தையும் விசாரித்தனர். அவரிடம் விஜய் தனது அரசியல் தொடர்பான முடிவுகளை மக்கள் முன் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷால், "விஜய் செய்தியாளர்களை நேரடியாக சந்திக்கட்டும். அதற்கு பிறகு தான் அவர் பற்றிய கருத்துக்களை நேரடியாக அவர் தெரிவிக்கலாம்" என்றார்.
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விஷால், " சமூக சேவையை முன்னெடுத்து மக்கள் நலனுக்காக செயல்பட விரும்பினால், அரசியலுக்கு யாரென்றாலும் வரலாம். இதில் எந்த தடையும் இல்லை" எனக் கூறினார்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்ந்து விவாதங்களை கிளப்பி வரும் சூழலில், நடிகர் விஷால் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். மேலும், விஜய் செய்தியாளர்களை சந்திக்கட்டும் என்பதன் மூலம், அவரின் அரசியல் நோக்கங்களை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
Listen News!